GALLERY
“கவர்ச்சியில் இறங்கிய நஸ்ரியா”.. வைரல் புகைப்படங்கள்
நடிகை நஸ்ரியா நசீமின் கண் கவரும் புகைப்படங்கள் இளைஞர்களை பாடாய் படுத்தி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக தொடக்கத்தில் நடிக்க தொடங்கிய நஸ்ரியா நசீம் மலையாளத்தில் “மாட் டாட்” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். எனினும் “நேரம்” திரைப்படத்தின் மூலம் தனது கியூட் ரியாக்சன்களால் பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்து பரவலாக அறியப்பட்டார்.
மேலும் அத்திரைப்படம் வெளியான சமயத்திலேயே அவருக்கு தமிழ்நாட்டிலும் ஒரு Fan base ஆரம்பம் ஆனது. அதன் பின் அவர் மலையாளத்தில் “ஷாலாலா மொபைல்ஸ்”, “ஓம் ஷாந்தி ஓஷானா”, “பெங்களூர் டேஸ்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
அதே போல் தமிழிலும் “ராஜா ராணி”, “நையாண்டி”, “வாயை மூடி பேசவும்”, “திருமணம் என்னும் நிக்கா”, “ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர் சில ஆண்டுகளாகவே நடிக்கவில்லை.
நஸ்ரியா இனி நடிக்கமாட்டாரா? என அவரது ரசிகர்கள் ஏங்கி போய் கிடந்தனர். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு “கூடே” என்ற திரைப்படத்தில் Come back கொடுத்தார். அதன் பின் “டிரான்ஸ்” திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.
தற்போது நானி ஹீரோவாக நடித்த “அன்ட்டே சுந்தரநிக்கி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இத்திரைப்படம் “அடடா சுந்தரா” என்ற பெயரில் தமிழிலும் வருகிறது. அதே போல் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவருகிறது.
தனது க்யூட் ரியாக்சன்களால் மக்களின் மனதை கவர்ந்து வந்த நஸ்ரியா தற்போது இணையத்தில் கண் கவரும் உடையில் மோகப் பார்வையுடன் ஒரு புகைப்படத்தை இறக்கியுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
