CINEMA
நஸ்ரியாவின் “அடடே சுந்தரா” திரைப்படத்தின் புதிய அப்டேட்..
நஸ்ரியா, நானீ ஆகியோரின் நடிப்பில் உருவான “அன்ட்டே சுந்தரநிக்கி” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
நஸ்ரியா நஸீம், நானீ ஆகியோரின் நடிப்பில் தெலுங்கில் உருவாகிய திரைப்படம் “அன்ட்டே சுந்தரநிக்கி”. இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவருகிறது. தமிழில் “அடடா சுந்தரா” என்ற பெயரிலும் மலையாளத்தில் “ஆஹா சுந்தரா”என்ற பெயரிலும் வெளிவருகிறது.
நேரம் திரைப்படம் மூலம் நம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நஸ்ரியா நஸீமிற்கு பல ஆண்டுகள் கழித்து தமிழில் ஒரு படம் வெளிவருகிறது. “நான் ஈ” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்த நானீக்கும் வெகு காலம் கழித்து தமிழில் திரைப்படம் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் சுவாரசியமான டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. நஸ்ரியா க்யூட் பெண்ணாக வலம் வருகிறார். அவரின் முக பாவனைகள் நம்மை நேரம் திரைப்பட நஸ்ரியாவை நியாபகப் படுத்துகிறது.
ஒரு ஹிந்து பையனிற்கு கிருஸ்துவ பெண்ணிற்குமான காதலில் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து கலகலப்பான திரைக்கதையை அமைத்திருப்பாதாக டீசரை பார்த்த போது வியூகிக்க முடிந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் டிரைலர் அப்டேட் வருகிற மே மாதம் 30 ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Leela and Sundar are coming to take you along on their joyous journeys ❤️#AnteSundaraniki, #AdadeSundara, #AhaSundara Trailer update on May 30 at 11:07 AM 💥💥
Natural Star @NameisNani #NazriyaFahadh #VivekAthreya @oddphysce @nikethbommi @SVR4446 @saregamasouth pic.twitter.com/vMIkFgh2BG
— Mythri Movie Makers (@MythriOfficial) May 28, 2022
இத்திரைப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். விவேக் சாகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.