Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்தாரா திருமணத்தில் பாலிவுட் பாட்ஷா? சர்ப்ரைஸ் தகவல்

CINEMA

நயன்தாரா திருமணத்தில் பாலிவுட் பாட்ஷா? சர்ப்ரைஸ் தகவல்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வில் பாலிவுட் பாட்ஷா ஒருவர் கலந்து கொள்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தற்போது மகாபலிபுரம் ரிசார்டில் நடைபெறுகிற நிலையில் ரஜினிகாந்த், ஏ. ஆர். ரகுமான், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்! பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா, அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் “ஜவான்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில் தற்போது ஷாருக் கான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சென்ற வருடம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் மூலம் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அதன் பின்பும் இருவரும் திருமணம் குறித்து மௌனம் சாதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் சர்ப்ரைஸ் செய்தி ஒன்றை கூறினார்கள். அதாவது ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். திருப்பதியில் திருமணம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் அதன் பின் திருமணம் நடைபெறும் இடத்தை மகாபலிபுரம் ரிசார்ட்டிற்கு மாற்றினார்கள். இந்நிலையில் இன்று அந்த ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top