CINEMA
விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் வாந்தி எடுத்த நயன்தாரா…ஆனால் நல்ல விஷயம் இல்லை..??
விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் நயன்தாரா வாந்தி எடுத்துள்ளார். ஒரு வேளை அந்த நல்ல விஷயமா? இல்லை. பின்பு என்ன காரணம்..?
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண வைபவ வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. சமீப நாட்களாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் நயன்தாராவை கைவிட்டு விட்டது எனவும், நெட்ஃப்ளிக்ஸில் நயன்-விக்கி திருமணம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நயன்-விக்கி திருமண வைபவம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் போல் சீசன்களாக வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்தது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷி ஆகினர்.
பல நாட்களாக நயன்-விக்கி திருமண வைபவத்தின் வீடியோ குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நயன்-விக்கி திருமண வைபவ வீடியோவின் முன்னோட்டம் சமீபத்தில் வெளிவந்தது.
மேலும் விரைவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோ வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் நயன்தாராவிற்கு பிரச்சனை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விக்னேஷ் சிவன் சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்ட நயன்தாராவிற்கு திடீரென சேராமல் போக வாந்தி எடுத்தாராம். உடனே மருத்துவமனையில் நயன்தாரா அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையுடன் வீடு திரும்பியுள்ளாராம். இவ்வாறு செய்திகள் பரவுகிறது.
