CINEMA
முதல்வரை சந்தித்த நயன்தாரா? எல்லாம் நல்ல விஷயம் தான்..
நயன்தாரா நேற்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்துள்ளார். ஏன் தெரியுமா?
நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். பல நாடுகள் காதல் புறாக்களாக பறந்து சென்று ஜோடியாக பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
“இப்படியே ஜோடியாக அலைந்து கொண்டிருக்கிறார்களே, எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்?” என அவரது ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் குறித்து வாய் திறக்கவில்லை.
“இப்படியே Live in உறவிலேயே நீடிக்க உள்ளனர் போல” என பேச்சுக்கள் அடிப்பட்டன. எனினும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் திருமணம் குறித்து மௌனம் காத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வந்தது. திருப்பதி கோவிலில் திருமணம் என முடிவானது.
ஆனால் சில நாட்களில் திருப்பதியில் திருமணம் இல்லை எனவும் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் எனவும் அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமண வைபோகத்திற்காக பிசியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இருவரும் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தனர். ஸ்டாலினுடன் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். ஸ்டாலினும் மகிழ்ச்சியோடு அழைப்பிதழை ஏற்றுக் கொண்டார். அப்போது நால்வரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அத்திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த முக்கியமானவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.