Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திருப்பதியில் நயன்-விக்கி தரிசனம்…

CINEMA

திருப்பதியில் நயன்-விக்கி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரம் ஷெராடான் பார்க் ரிசார்ட்டில் வைத்து நடைபெற்றது. அவர்களின் திருமண விழாவில் ரஜினிகாந்த், மோகன் ராஜா, ஐசரி கணேஷ், தொகுப்பாளினி டிடி, ஷாருக் கான் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இத்திருமண நிகழ்வை கௌதம் வாசுதேவ் மேனன் நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். முதலில் இவர்களது திருமணம் திருப்பதியில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

திருப்பதியில் நயன்தாரா மஞ்சள் உடையில் ஜொலிக்கிறார். பார்ப்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் வேஷ்டி சட்டையில் புது மாப்பிளை கலையோடு காட்சி தருகிறார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் இருந்தே இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரும் Live in உறவில் இருந்து கொண்டு பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

ஆனால் திருமணம் குறித்து மௌனம் சாதித்து வந்தனர். இவர்கள் இருவரும் இப்படியே Live in உறவிலேயே இருந்துவிடுவார்கள் போல என ரசிகர்கள் எண்ணிக் கொண்டனர். எனினும் சர்ப்ரைஸாக கடந்த வருடம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். அதன் பின் தற்போது கடந்த 9 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top