CINEMA
விக்னேஷ் சிவனை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு இப்படி கட்டி அணச்சிக்கிட்டாங்களோ.. வைரல் புகைப்படம்
நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை இறுக்கி கட்டியணைத்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.
இருவரும் திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். இவர்கள் இப்படியே Live in உறவிலேயே இருந்துவிடப் போகிறார்கள் என சில பேச்சுக்களும் அடிப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதனை கொண்டு இருவரும் திருமணம் செய்வது உறுதி என தெரியவந்தது.
ஆனாலும் அதன் பின்பு திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். அதன் பின் இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் உடனே திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்கள் அங்கே தான் திருமணம் செய்யப்போவதாக இருந்தது. சில காரணங்களால் மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற நிலையில் சில நாட்களாக அங்கே இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது இருவரும் ஹனிமூன் டிரிப்புகளை முடித்து விட்டு தமிழ்நாடு திரும்பி விட்டனர். எனினும் சமீபத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளிவந்தன. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டி அணைத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் “விக்னேஷ் சிவனை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்பது போல் நயன்தாரா தன்னுடைய மார்போடு விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்துக் கொண்டிருக்கிறார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.