Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“லவ் பண்ணா இப்படி லவ் பண்ணனும்…” நயன்-விக்கியின் ரொமான்ஸ் புகைப்படங்கள்

CINEMA

“லவ் பண்ணா இப்படி லவ் பண்ணனும்…” நயன்-விக்கியின் ரொமான்ஸ் புகைப்படங்கள்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் சில புகைப்படங்கள் காணக் கண் கோடி வேண்டும் என்பது போல் அமைந்துள்ளன.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

இருவரும் திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். இவர்கள் இப்படியே Live in உறவிலேயே இருந்துவிடப் போகிறார்கள் என சில பேச்சுக்களும் அடிப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதனை கொண்டு இருவரும் திருமணம் செய்வது உறுதி என தெரியவந்தது.

அதன் பின் இருவரும் கடந்த மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் உடனே திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்கள் அங்கே தான் திருமணம் செய்யப்போவதாக இருந்தது. சில காரணங்களால் மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். சில நாட்களாக அங்கே இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். பார்வையாளர்கள் கண் வைக்கும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

அதன் பின் இருவரும் அவரவர்களின் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது கடற்கரையில் இருவரும் ஜோடியாக ரொமான்ஸ் செய்வது போல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படங்கள் காணக் கண் கோடி வேண்டும் என்பது போல் மிகவும் அழகாக உள்ளது.. அப்புகைப்படங்கள் இதோ…

 

Continue Reading

More in CINEMA

To Top