CINEMA
நயன்தாரா திருமணத்தில் ஸ்பெஷல் இளநீர் பாயாசம்…என்னென்ன உணவு ஐட்டங்கள் இருக்கு ன்னு பாருங்க..
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் இடம்பெற்ற விருந்து வகைகளை உடைய மெனு கார்டை பாருங்க..
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரம் ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரம் ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுக்கு 200 பேர்கள் வரை மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் செல்ஃபோன்களை உள்ளே எடுத்துச் செல்ல கூடாது என தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் விருந்தில் இடம்பெற்ற வித விதமான உணவு வகைகள் குறித்தான மெனு கார்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பன்னீர் பட்டானி கறி, பருப்பு கறி, அவியல், மோர் குழம்பு, செட்டிநாடு கறி, உருளைக் கிழங்கு கார மசாலா, வாழைக்காய் வறுவல், சென்னா கிழங்கு வறுவல், சேப்ப கிழங்கு புளி குழம்பு, காலான் மிளகு வறுவல், கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல், காய் பொரிச்சது, பொன்னி ரைஸ், Kathal பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம் ஆகிய பல உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் Dessert பட்டியலில் பாதாம் ஹல்வா, இளநீர் பாயாசம், ஐஸ் கிரீம் போன்ற தின்பண்டங்கள் இடம்பெற்றுள்ளன.