CINEMA
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் இதெல்லாம் அனுமதி கிடையாதாம்?..
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.
திருமண பேச்சை குறித்து இருவருமே மௌனம் சாதித்தனர். இவர்கள் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே Live in உறவில் இருக்கப் போகிறார்கள் போல என ரசிகர்கள் எண்ணிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சென்ற வருடம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் மூலம் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அதன் பின்பும் இருவரும் திருமணம் குறித்து மௌனம் சாதித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சர்ப்ரைஸ் செய்தி ஒன்றை கூறினார்கள். அதாவது ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். திருப்பதியில் திருமணம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளிவந்தது.
ஆனால் அதன் பின் திருமணம் நடைபெறும் இடத்தை மகாபலிபுரம் ரிசார்ட்டிற்கு மாற்றினார்கள். இந்நிலையில் இன்று அந்த ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு முன் காலை 7.30 க்குள் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் 8.30 மணிக்கு மேல் தான் திருமண விழா என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான் , விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இத்திருமண விழாவிற்கு வருகை தருவோர் செல்ஃபோன்களை உள்ளே எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தரப்பட்டுள்ளதால் எவரும் புகைப்படமோ வீடியோவோ எடுக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.