Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்-விக்கி தம்பதியினரின் க்யூட்டான ஹனிமூன் புகைப்படங்கள்..

CINEMA

நயன்-விக்கி தம்பதியினரின் க்யூட்டான ஹனிமூன் புகைப்படங்கள்..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் க்யூட்டான ஹனிமூன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

அத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார் என்பது கூடுதல் தகவல்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

இருவரும் திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். இவர்கள் இப்படியே Live in உறவிலேயே இருந்துவிடப்போகிறார்கள் என சில பேச்சுக்களும் அடிப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதனை கொண்டு இருவரும் திருமணம் செய்வது உறுதி என தெரியவந்தது.

ஆனாலும் அதன் பின்பு திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டு நல்லபடியாக முடிவடைந்தது.

இந்நிலையில் இருவரும் பேங்காக்கிற்கு ஹனிமூன் சென்றிருப்பதாக சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அப்புகைப்படங்கள் இதோ…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top