CINEMA
“நயன்தாரா-விக்கி திருமணம் திருப்பதில கிடையாதாம்?.. எங்கே ன்னு தெரியுமா?
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என செய்தி வெளியான நிலையில் தற்போது திருமணம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் தற்போது அவர்களின் திருமணம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் அமைந்துள்ள மகாப்ஸ் என்ற ரிசார்ட்டில் வைத்து தான் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சௌகரியத்திற்காகவே இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறாரகள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 வருடங்களாக பழகி வருகின்றனர். இருவரும் ஜோடியாக பல நாடுகளுக்கு சுற்றி வந்து தங்களது காதல் தருணத்தை கொண்டாடி வந்தனர். எப்போதும் இருவருமே நெருக்கமாக இருக்கும் வகையில் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து “க்யூட் கப்பில்” (cute couple) என்ற பெயரையும் பெற்றனர்.
“இருவரும் இப்படி பல ஆண்டுகளாக பழகி வருகிறார்களே, இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்?” என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திருமணம் குறித்து எந்த பதிலையும் இருவரும் கூறாமலே வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்கள். அதன் பின் சமீபத்தில் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவலும் வந்தது. திருப்பதியில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறும் இடம் மாற்றபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
