Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்தாராவின் புதிய  திரைப்படத்தின் டீசர் என்னைக்கு ன்னு தெரியுமா?

CINEMA

நயன்தாராவின் புதிய  திரைப்படத்தின் டீசர் என்னைக்கு ன்னு தெரியுமா?

நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் என்னைக்கு வெளியாகிறது தெரியுமா?

நயன்தாரா நடிகை மட்டும் அல்லாது தற்போது அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. அவர் தயாரித்த “கூழாங்கல்” திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளிவந்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் இளைஞர்களின் மனதை கவர்ந்தது.

இதனிடையே நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 வருடங்களாக பழகி வந்தனர். இருவரும் ஜோடியாக பல நாடுகளுக்கு சுற்றி வந்து தங்களது காதல் தருணத்தை கொண்டாடி வந்தனர். எப்போதும் இருவருமே நெருக்கமாக இருக்கும் வகையில் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து “க்யூட் கப்பில்” (cute couple) என்ற பெயரையும் பெற்றனர்.

“இருவரும் இப்படி பல ஆண்டுகளாக பழகி வருகிறார்களே, இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்?” என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திருமணம் குறித்து எந்த பதிலையும் இருவரும் கூறாமலே வந்தனர்.

ஒருவேளை இருவரும் “Living together” ஆகவே கடைசி வரை இருந்து விடுவார்களோ?” என்று கூட ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய திருமண தேதியை இருவரும் அறிவித்தனர். வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து நயன்தாரா சமீபத்தில் தோனியை சந்தித்தது வைரலானது. தோனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கப் போகிறார் எனவும் அதில் நயன்தாரா தான் கதாநாயகியாக நடிக்க போகிறார் எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் நயன்தாரா  நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான “O2” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஜி. எஸ். விக்னேஷ் இயக்குயுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top