CINEMA
மோடிக்கு பச்சை கொடி.. வீட்டில் மூவர்ணக் கொடி… சபாஷ் தளபதி!!
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க விஜய் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வருகிற 15 ஆம் தேதி இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு சமீபத்தில் “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றவேண்டும் எனவும், சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக மாற்றி வருகின்றனர். மேலும் அவர்களது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கூட தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
“மெர்சல்” திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் பாஜகவினருக்கும் விஜய்க்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து “மாஸ்டர்” திரைப்பட படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் வரிமான வரித்துறை ரெயிடும் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது “பெட்ரோல் விலை அதிகரித்தலை எதிர்த்து விஜய் செய்த செயல்” என பேசப்பட்டது. ஆனால் இதனை விஜய் தரப்பு மறுத்தது. இதனால் விஜய் பாஜகவை எதிர்க்கிறார் என்றே உருவகிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விஜய், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதால் விஜய் மோடிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.