CINEMA
“கோப்ரா”வை தூக்கி ஓரமாக போட்ட பா ரஞ்சித்.. தரமான சம்பவம்
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான “கோப்ரா” திரைப்படத்தை ஓவர் டேக் செய்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். தரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. என்ன தெரியுமா?
“கோப்ரா” திரைப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. ஆனால் திரைப்படத்தின் தேவையில்லாத நீளம் காரணமாகவும் சொத்தப்பலான திரைக்கதையாலும் ரசிகர்களுக்கு “கோப்ரா” பெரும் சோதனையாக முடிந்தது.
எங்கு திரும்பினாலும் கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருந்தது. இதனால் படக்குழு 3 மணி நேர திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்கியுள்ளனர்.
“கோப்ரா” திரைப்படம் வெளியான அதே நாளில் தான் பா ரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படமும் வெளியானது. இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரிவ்யூக்களே அதிகமாக வருகின்றன. பாலினம், மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டிய ஒரு மார்டன் காதலை மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
“காதலும் ஒரு அரசியல் தான்” என தனது கருத்தை மிகவும் தைரியமாக இத்திரைப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பா ரஞ்சித் என விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இத்திரைப்படம் தமிழகத்தில் மிகவும் சொற்பமான திரையரங்குகளிலேயே வெளியானது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு வரும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களை பார்த்து பல ஊர்களில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்தியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Keep the Love coming!
Shows increased for #NatchathiramNagargiradhu in multiple locations!#NatchathiramNagargiradhuShowsIncreased@beemji @vigsun @Manojjahson @yaazhifilms_ @tenmamakesmusic @kishorkumardop @EditorSelva @anthoruban @Jayaraguart @iamSandy_Off @STUNNER_SAM pic.twitter.com/z2ebM5MQmK
— Neelam Productions (@officialneelam) September 1, 2022
“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் பல ஊர்களில் வெளியாகக்கூட இல்லை என பலரும் இணையத்தில் தெரிவித்து வந்தனர். இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தற்போது காட்சிகளை அதிகப்படுத்தியிருப்பது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீயான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படம் சறுக்கியுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.