GOSSIPS
“காப்பி அடித்தாவது கதையை முடி”… “மிருக” இயக்குனரின் காலில் விழுந்த “நட்சத்திர” நடிகர்
காப்பி அடித்தாவது கதையை முடிக்க சொல்லி “நட்சத்திர” நடிகர் “மிருக” இயக்குனரிடம் கெஞ்சும் நிலைமைக்கு போய் விட்டாராம். ஏன் தெரியுமா?
“மிருக” பெயரில் படம் எடுத்த அந்த “மிருக” இயக்குனர் நெட்டிசன்களால் வேற லெவலில் ட்ரோல் செய்யப்பட்டதில் இருந்து அவர் தனது அடுத்த படத்திலாவது உஷார் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் “நட்சத்திர” நடிகரை வைத்து படமெடுக்க வாய்ப்பு கிடைத்தும் ஏதேதோ பழைய ஆங்கில ஆக்சன் படங்களில் இருந்து சீன்களை உருவி கதை எழுதுகிறாராம். இது அந்த “நட்சத்திர” நடிகருக்கு தெரிய வர, உடனே அதை எல்லாம் நிறுத்த சொல்லி, அவர் நடிப்பில் ஹிட் படங்களை கொடுத்த அந்த பழைய இயக்குனரை துணைக்கு சேர்த்து விட்டார்.
ஆனால் கதை எழுத ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் எதுவும் தேறவில்லை. ஆதலால் கடுப்பான “நட்சத்திர” நடிகர் வேறு ஒரு ரூட்டை பிடித்தாராம். அதாவது இயக்குனரிடம் “எந்த படத்தை வேண்டுமானாலும் காப்பி அடித்துக் கொள், ஆனால் சுவாரசியமாக இருந்தால் போதும்” என கூறினாராம்.
இதனால் குஷியான “மிருக” இயக்குனர் வெறித்தனமாக உலக சினிமாக்களை பார்த்து பார்த்து சில காட்சிகளை உருவி படத்தின் கதையை தயார் செய்து விட்டாராம். ஒரு வழியாக கதை தயாராகி விட்டதை எண்ணி தற்போது ஓரளவு ஆசுவாசத்தில் இருக்கிறாராம் “நட்சத்திர” நடிகர்.
விரைவில் “நட்சத்திர” நடிகர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் ஒரு வழியாக “மிருக” இயக்குனர் பல உலக சினிமாக்களில் இருந்து பல காட்சிகளை உருவி தயார் செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் ஆங்காங்கே கிசுகிசுக்கப்படுகிறது.