GOSSIPS
“எனக்கு உங்க சங்காத்தமே வேண்டாம்டா”… ஜகா வாங்கிய “நட்சத்திர” நடிகர்
அந்த கட்சியோடு எந்த சங்காத்தமும் வேண்டாம் என்பதற்காகவே அந்த விருது விழாவுக்கு செல்லவில்லையாம் அந்த “நட்சத்திர” நடிகர்.
அந்த பெரிய அரசியல் கட்சி ஒன்று தென்னிந்தியாவில் தனது கொடியை ஊன்றுவதற்காக எந்த லெவலிலும் இறங்கி வருகிறது. சமீபத்தில் கூட அந்த தலைமுறைகளை தாண்டிய மியூசிக் டைரக்டருக்கு ஒரு சிறப்பான விஷயத்தையும் செய்து கொடுத்தது.
இவ்வாறு அந்த கட்சி பல பிரபலங்களை குறி வைத்து பிளான் போட்டு வரும் நிலையில் தற்போது அந்த “நட்சத்திர” நடிகரை குறி வைப்பதாக பேச்சுக்கள் எழுகின்றன. ஏற்கனவே நடிகர் நமக்கு இந்த பாலிடிக்ஸே வேண்டாம் என ஒதுங்கிய நிலையில் அந்த இசையமைப்பாளருக்கு செய்தது போலவே சிறப்பான ஒன்றை நடிகருக்கு செய்து விடலாம் என அவருக்கு தகவல் போனதாம்.
ஏற்கனவே அந்த இசையமைப்பாளர் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாப்பின்னம் ஆகியுள்ள நிலையில் தற்போது அந்த ஆபத்து நம்மை நோக்கி தான் வருகிறது என்று புரிந்து கொண்டாராம் “நடசத்திர” நடிகர். இந்த தருணத்தில் தான் சமீபத்தில் அந்த “நட்சத்திர” நடிகருக்கு விருது வழங்க முடிவெடுத்ததாம் அந்த பெரிய கட்சி.
இதில் நாம் சிக்கிவிடவே கூடாது என முடிவெடுத்ததனால் தான் “நட்சத்திர” நடிகர் நேரடியாக செல்லாமல் மறைமுகமாக இன்னொருவரை அனுப்பி அந்த விருதை வாங்கியுள்ளாராம்.
“ஏற்கனவே அவர் அந்த கட்சி ஆட்களிடம் சிக்கப் பார்த்தார். ஆனால் தெளிவடைந்து அதில் ஒருந்து தப்பித்தார். தற்போது மீண்டும் அந்த சிக்கலில் இருந்து தந்திரமாக தப்பித்துள்ளார்” என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
