GOSSIPS
“நட்சத்திர” நடிகைக்கு வியாதி? வெளியான திடுக்கிடும் தகவல்
“நட்சத்திர” நடிகைக்கு ஒரு பெரிய வியாதி இருப்பதால் தான் “ரவுடி” டைரக்டரை திருமணம் செய்ய உள்ளாராம்.
“நட்சத்திர” நடிகையும் “ரவுடி” டைரக்டரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என உலகத்துக்கே தெரியும். இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமண செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர்.
இருவரும் பல ஆண்டுகள் “Live in”-ல் இருந்தார்கள். இவர்களுக்கு எப்போது திருமண நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திருமணம் குறித்து இருவரும் எந்த பேச்சையும் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு எல்லாம் இருவரும் ஜோடி சேர்ந்து சுற்றி வந்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இருவரும் இப்படியே திருமணம் செய்யாமல் “Live in”-லயே இருக்கப்போகிறார்கள் போல என ரசிகர்கள் முடிவே செய்துவிட்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்யப்போவதாக அறிவித்தனர். திருமணத்திற்கான தேதியையும் அறிவித்தனர்.
ஆனால் எதற்காக இப்போது திருமணம் செய்ய “நட்சத்திர” நடிகை முடிவெடுத்துள்ளார் தெரியுமா? “நட்சத்திர” நடிகைக்கு பல நாட்களாக தோல் வியாதி இருக்கிறதாம். ஆதலால் 5 மாதத்திற்கு நடிப்புக்கு முழுக்கு போடப் போகிறாராம். வெறுமனே நடிப்புக்கு முழுக்கு போட்டால் தனக்கு வியாதி இருப்பது வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக தான் காதலித்து வந்த “ரவுடி” இயக்குனரை திருமணம் செய்யப்போகிறாராம். யாராவது கேட்டால் ‘திருமணம் செய்ததால் சில நாட்கள் ரெஸ்ட்” என வெளியில் கூறிக்கொள்ளலாம் என ஐடியா போட்டிருக்கிறாராம்.
திருமணத்திற்கு பின் 5 மாதங்கள் “கடவுளின் தேசத்தில்” தோல் வியாதி குணமாக முழுக்க முழுக்க ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளப் போகிறாராம். திருமணத்திற்கு பின் ஹனிமூன் போக வேண்டாம் என “ரவுடி” இயக்குனரிடம் கூற அவரும் டபுள் ஓகே கூறியிருக்கிறாராம். தோல் வியாதி இருப்பதனால் தான் சமீபத்தில் வெளியான “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகர் நடித்த திரைப்படத்தில் வயதானது போல் காட்சி தந்திருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.
