CINEMA
“எனக்கு டிவின்ஸ் பிறந்திருக்கு மச்சான்ஸ்”.. குஷியில் நமீதா
தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகை நமீதா மகிழ்ச்சி பொங்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நமீதா. கிளாமர் தோற்றத்தில் பல திரைப்படங்களில் தோன்றி 90ஸ் கிட்ஸ்களின் தூக்கத்தை கெடுத்தவர் இவர். தமிழ் சினிமா ரசிகர்களை கிட்டதட்ட 10 வருடங்கள் கைக்குள் போட்டுக்கொண்டவர் நமீதா என்றால் அது மிகையாகாது.
இவர் திரையில் தோன்றினாலே விசில் பறக்கும். அந்த அளவுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர். நமீதா சில வருடங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அவருக்கு தமிழ் தெரியாது என்றாலும் தனது கொஞ்சும் தமிழில் “மச்சான்ஸ்” என கூறுவது வேற லெவல் டிரெண்ட் ஆனது. இப்போது நமீதா என்றாலே “மச்சான்ஸ்” என்ற வார்த்தை தான் பலருக்கும் நினைவில் வரும்.
நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும் தற்போது நமீதா அக்கட்சியில் தமிழக மாநில செயற்குழு உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நமீதா, தான் கர்ப்பமாக இருப்பதாக பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த விஷயத்தை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கும் வகையில் நமீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் இந்த நன்னாளில் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram