Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நமிதா வயிற்றில் குழந்தை”.. pregnancy photoshoot

GALLERY

“நமிதா வயிற்றில் குழந்தை”.. pregnancy photoshoot

நடிகை நமிதா தான் கருவுற்றிருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

90’s kids-களின் கனவு கன்னியாக திகழ்ந்த நமிதாவை நம்மால் மறக்கமுடியுமா? ஒரு காலத்தில் கவர்ச்சியில் புயல் போல் சுழன்று இளசுகளின் மனசை பறக்கவிட்டவர் அவர். அவர் நடிப்பில் கோலோச்சிய காலத்தில் அவரை மிஞ்சி எந்த நடிகையும் கவர்ச்சியில் பாஸ் மார்க் கூட வாங்கவில்லை. அந்த அளவுக்கு அன்றைய இளைஞர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் நமிதா.

தமிழின் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் குத்தாட்டம் போட்டவர் நமிதா. “அர்ஜூனா அர்ஜூனா” பாடலில் அவரின் நடையிலும் உடையிலும் மயங்காத நபர் உண்டா?. அவரின் chubby ஆன கன்னமும் தழுதழுக்கும் மேனியும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாக இருந்தது. “நான் அவன் இல்லை” திரைப்படத்தில் “மச்சக்கன்னி ஒத்துக்குச்சு” பாடலில் அவர் ஆடிய குத்தாட்டத்தில் பட்டி தொட்டியெல்லாம் நடுங்கியது. “பில்லா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் மீண்டும் நானாக வேண்டும்” என்ற பாடலில் கவர்ச்சியில் டாப் கியர் போட்டு எகிறியிருப்பார். “ஹேய் மச்சான்” என்று அவரது கொஞ்சும் தமிழில் பேசும்போது அதில் மயங்காதவர்கள் யாரும் உண்டோ?

தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் நமிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கருவுற்றிருக்கும் புகைப்படங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களில் அவரது முகத்தில் தாய்மை உணர்வு ஜொலிக்கிறது.

அப்புகைப்படங்களில் “தாய்மையுணர்வு, ஒரு புது அத்தியாயம் தொடங்கிய போது நான் மாறிவிட்டேன், ஏதோ என்னில் மெல்லியதாய் ஒன்று புகுந்தது போன்ற ஓர் உணர்வு,. நீ தான் என்றும் என்னுடைய விருப்பமாக இருந்தது. உனக்காக நான் பிரார்த்தனை செய்தேன். உன்னுடைய செல்ல உதைகளை நான் உணர்கிறேன். இது வரை இல்லாத ஏதோ ஒன்றாக என்னை ஆக்குகிறாய்” என நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top