CINEMA
சமந்தாவை பற்றி பேசாதீங்க.. கடுப்பான நாக சைதன்யா
சமந்தாவை பற்றி என்னிடம் தயவு செய்து பேசாதீர்கள் என சமீபத்திய பேட்டியில் கோபமாக பேசியுள்ளார் நாக சைதன்யா.
சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இவர்கள் பிரிந்து ஒரு வருட காலமானாலும் சமந்தாவும், நாக சைதன்யாவும் எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் அவர்கள் இருவரின் பிரிவை பற்றியே பல கேள்விகள் கேட்கப்படுகிறது.
இந்த நிலையில் நாக சைதன்யா அமீர் கானுடன் “லால் சிங் சத்தா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி வெளியாகிறது.
இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாக சைதன்யா தற்போது பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நாக சைதன்யாவிடம் சமந்தா குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கடுப்பான நாக சைதன்யா “நான் எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் சமந்தாவை குறித்தே கேட்டுகொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றி பேசுங்கள், எனது நடிப்பை பற்றி பேசுங்கள். ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே பேசுகிறார்கள்” என கூறினார்.
மேலும் அவர் கலந்து கொண்ட பல பேட்டிகளில் சமந்தாவும் அவரும் சேர்ந்து இனிமேல் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது” என பதில் கூறியது குறிப்பிடத்தக்கது.