TELEVISION
ரக்சன் உன் தோலை உறிச்சிடுவேன்.. கடுப்பான வில்லன் நடிகர்..
தொகுப்பாளர் ரக்சனின் தோலை உறித்துவிடுவதாக மிரட்டிய அந்த வில்லன் நடிகர்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற வாரம் செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் அம்மு அபிராமி, முத்துக்குமார், வித்யூலேகா, தர்ஷன் ஆகியோர் போட்டி போட்டனர்.
இதில் முத்துக்குமாருக்கு கோமாளியாக சிவாங்கியும் ரக்சனும் வந்திருந்தனர். மெயின் குக்கிங்கில் குக்குகள் 15 நிமிடம் வேறொரு அறைகுள்ளே இருக்க வேண்டும். அதன் பின் Working Station-க்கு வரவேண்டும். அதன் பின் மீண்டும் 15 நிமிடம் உள்ளே அறைக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி சமைக்க வேண்டும். குக் இல்லாத நேரம் கோமாளிகள் சமைக்க வேண்டும். குக்குகள் அறைக்குள் இருந்து சொல்ல சொல்ல சமைக்க வேண்டும்.
இந்த ரவுண்டில் முத்துக்குமாரின் கோமாளிகளான ரக்சனும் சிவாங்கியும் சரியாக வேலை செய்யாமல் முத்துக்குமாரை கடுப்படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்துக்குமார் ரக்சனிடம் உள்ளிருந்து “ரக்சன், அந்த பெரிய வெங்காயத்தில் தோலை உறிங்க. நீங்க தோலை உறிக்கலைனா உங்க தோலை உறிச்சிடுவேன்” என கூறினார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வென்று ஸ்ருத்திகா நேரடியாகவே இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் செமி ஃபைனலில் நால்வருக்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.
இதில் அம்மு அபிராமி சிறப்பாக சமைத்து செகண்ட் ஃபைனலிட்டாக இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். அதன் பின் வித்யூலேகா, தர்ஷன், முத்துக்குமார் ஆகியோருக்கு இடையே எலிமினேஷன் ரவுண்ட் நடந்தது.
அதில் சிறப்பாக சமைத்து வித்யூலேகா மூன்றாவது ஃபைனலிஸ்டாக இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார். இதனை தொடர்ந்து முத்துக்குமார், தர்ஷன் ஆகியோருக்கிடையே யாரை எலிமினேட் செய்வது என்பதில் நடுவர்களுக்கு குழப்பம் வந்தது.
ஏனென்றால் இருவருமே சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்றனர். எனினும் நிகழ்ச்சியின் விதிகளின் படி ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில் தவிர்க்க முடியாத சின்ன பாயிண்ட் வேறுபாட்டால் முத்துக்குமார் எலிமினேட் ஆனார்.
