TELEVISION
இமானின் முன்னாள் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களா?
இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசையமைப்பாளர் இமான் தனது 18 வயதிலேயே தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் வெளிவரவில்லை. ஆனால் அதன் பின் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்திற்கு இசையமைத்தார். அதுவே இவரது முதல் படமாக அறியப்படுகிறது.
தமிழன் திரைப்படத்தின் பாடல்களை 90’s kids-கள் மறந்திருக்க முடியாது. எல்லா பாடல்களுமே பக்கா ஹிட். அதுவும் விஜய்யும் பிரியங்கா சோப்ராவும் தன் சொந்த குரலில் பாடிய “உள்ளத்தை கிள்ளாதே” பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
அதன் பின் பல திரைப்படங்கள், பல ஹிட் பாடல்கள் என சென்ற அவரது கேரியரில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மைனா”. “மைனா” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதை லேசாக ஆக்க கூடியவை. அத்திரைப்படத்திற்கு பிறகே அவரது மார்க்கெட் வேற லெவலில் எகிறியது. அதன் பின் அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான் என ஆனது. “விஸ்வாஸம்” திரைபடத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” என்ற பாடல் இமானுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சார்ட்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதன் பின் சமீபத்தில் இமான் அமீலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே முன்னாள் கணவருடன் பிறந்த ஒரு மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6-ல் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா பங்கேற்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவாரா அல்லது கமல் தொகுத்து வழங்குவாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.
