HOLLYWOOD
முதல் “முஸ்லீம்” சூப்பர் ஹீரோ.. வெளியானது மிஸ். மார்வெல்…
மார்வெல் சூப்பர் ஹீரோ வரலாற்றிலேயே முதன் முதலாக முஸ்லீம் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தை கொண்ட” மிஸ். மார்வெல்” வெப் சீரிஸ் சிறிது நேரத்திற்கு முன் வெளியாகியுள்ளது.
மார்வெல் தயாரிப்பு நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; தி மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் வெளிவந்து உலகளவில் மாஸ் காட்டியது.
அதே போல் “வாண்டா விஷன்”, “லோகி” போன்ற வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் “மிஸ். மார்வெல்” என்ற வெப் சீரீஸ் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதில் சூப்பர் ஹீரோ ஒரு பெண் என்பதும் அப்பெண் கதாப்பாத்திரம் தெற்காசியாவை சேர்ந்த முஸ்லிம் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் என்பதும் தெரிய வந்தது.
இதுவரை தெற்காசியாவை சேர்ந்த எந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தையும் மார்வெல் நிறுவனம் உருவாக்கவில்லை. அதுவும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த கதாப்பாத்திரத்தை. கருப்பினத்தவர்களில் பல சூப்பர் ஹீரோக்கள் வலம் வந்தாலும் முஸ்லீம் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் “மிஸ். மார்வெல்” வெப் சீரீஸ் இன்று வெளிவந்துள்ளது. ஆம்!. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
“மிஸ். மார்வெல்” வெப் சீரீஸின் பெண் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தின் பெயர் கமலா கான். இக்கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை இமான் வெல்லனி. இவர் பாகிஸ்தான்-கனடா நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இந்த வெப் சீரீஸில் தெற்காசிய நடிகர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக பாலிவுட்டின் பிரபல நடிகரும் இயக்குனரும் ஆன ஃபரான் அக்தர் இந்த வெப் சீரீஸில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
