CINEMA
“நான் சாவது தான் ஒரே வழி”.. கதறி அழுத மீரா மிதுன்
தனக்கு சாப்பிடுவதற்கு கூட வழி இல்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் மீரா மிதுன் அழுது புலம்பியுள்ளார்.
நடிகை மீரா மிதுன் 2013 ஆம் ஆண்டு வாக்கில் மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தார். இதன் பின் “8 தோட்டாக்கள்” “தானா சேர்ந்த கூட்டம்” “போதை ஏறி புத்தி மாறி” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எனினும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியின் மூலமாக தான் மீரா மிதுன் பிரபலமாக அறியப்பட்டார். “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் சேரன் தன்னை தப்பான விதத்தில் தொட்டார் என அப்போதே ஒரு சர்ச்சையை கிளப்பினார். எனினும் குறும்படம் மூலமாக அது உண்மை அல்ல என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விஜய், ரஜினி என பல நடிகர்கள் குறித்த பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனிடையே ஒரு முறை பட்டியலினத்தவர்களை பற்றி சர்ச்சையான கருத்தை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் மீதும் அவரது நண்பர் ஷாம் மீதும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் ஜாமினில் வெளியே வந்த அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் போலீஸார் மீண்டும் கைது செய்தனர். சில நாட்களில் மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீரா மிதுன் “நான் கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் அழைந்து கொண்டு இருக்கிறேன். ஆதலால் என்னால் ஷூட்டிங் போக முடியவில்லை, வீட்டிலும் என்னை சேர்க்க மாட்டிக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் “வக்கீலுக்கு கொடுக்க கூட காசு இல்லை. என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை. ஆதலால் எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை என தோன்ற ஆரம்பித்துவிட்டது” என கூறி கதறி அழுதுள்ளார். சமூக வலைத்தளங்களில் மீரா மிதுன் மேல் பலரும் பரிதாப்பப்பட்டாலும் ஒரு பக்கம் பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
