CINEMA
ரஜினியின் புதிய திரைப்படத்தில் இணைந்த மாஸ் டைரக்டர்; NEW UPDATE!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் மாஸ் இயக்குனர் ஒருவர் இணைய உள்ளார்.
“பீஸ்ட்” திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த வேளையிலேயே இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது.
இதனை தொடர்ந்து “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களை சோர்வடைய வைத்தது. திரைப்படம் சரியாக எடுபடவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் இருந்தன.
மேலும் “பீஸ்ட்” நெகட்டிவ் ரிவ்யூக்கள் அதிகம் வாங்கியதால் ரஜினி நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் இருந்து விலகுகிறார் என்று செய்தியும் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என தெரிய வந்தது. அதாவது ரஜினி-நெல்சன் கூட்டணி எந்த வித சந்தேகமும் இல்லாமல் உறுதியாகி உள்ளது.
தற்போது “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சன் குறித்து பல மீம்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரஜினிக்கும் நெல்சன் வைத்து செய்து விடுவார் என பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபட்டு வருகின்றன.
நெல்சன் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கூட தான் இத்தனை மாதத்திற்கு மேல் திரைக்கதையை எழுதமாட்டேன் என கூறியதை நெட்டிசன்கள் இப்போது தோண்டி எடுத்து வந்து நெல்சனை கலாய்த்து வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக பேச்சுக்கள் எழுகின்றன.
இந்நிலையில் நெல்சன் ரஜினியை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் திரைக்கதையை மெருகேத்த ஒரு மாஸ் டைரக்டரை துணைக்கு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதையை மெருகேத்த இயக்குனர் நெல்சனுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
கே. எஸ். ரவிக்குமார் ரஜினியை வைத்து “முத்து”, “படையப்பா” ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.