Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தனது சிறுவயது புகைப்படத்தை பார்த்து தானே ஷாக் ஆன மணிமேகலை.. செம fun..

TELEVISION

தனது சிறுவயது புகைப்படத்தை பார்த்து தானே ஷாக் ஆன மணிமேகலை.. செம fun..

தனது சிறுவயது புகைப்படங்களை உடைய Compilation வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

மணிமேகலை ஆரம்ப கட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJ ஆக தனது கேரியரை தொடங்கினார். அப்போதே அவருக்கு அதிக Fan base உருவாகியது.

அதன் பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார் மணிமேகலை. இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்ற நபரை காதலித்து பெற்றோர்கள் சம்மதமில்லாத நிலையிலும் திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அதன் பின் அவர் மீண்டும் பரவலாக அறியப்பட்டார்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் அவரது சேட்டைகள் பயங்கரமாக இருந்தது. அவர் கோமாளிகளாக போன குக்குகள் பெரும்பாலும் எலிமினேட் ஆகி விடுவதால் அவரை சூனியக்காரி என்று கேலியாக அழைக்க ஆரம்பித்தனர்.

மணிமேகலை தனது கணவர் ஹுசேனுடன் சேர்ந்து பல கலகலப்பான வீடியோக்களை அவர்களது யூட்யூப் சேன்னலில் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். மணிமேகலை-ஹுசேன் ஜோடிக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. தம்பதியர் என்றால் மணிமேகலை-ஹுசேன் ஜோடி போல் இருக்க வேண்டும் என இணையத்தில் பலரும் பாராட்டி வருவதும் உண்டு.

இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படங்களை Compilation வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் வடிவேலு காமெடியில் இடம்பெறும் “நம்ம மூஞ்சா இப்படி இருக்கு”, “நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” போன்ற நகைச்சுவை வசனங்கள் ஒலிக்கிறது. இந்த வீடியோ கலகலப்பான வீடியோவாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in TELEVISION

To Top