Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மதுபானக் கடையில் குடித்துவிட்டு லந்து காட்டிய மம்முட்டி.. வைரல் வீடியோ

CINEMA

மதுபானக் கடையில் குடித்துவிட்டு லந்து காட்டிய மம்முட்டி.. வைரல் வீடியோ

மம்முட்டி மதுபான கடையில் சிவாஜி கணேசனின் வசனத்தை பேசி லந்து காட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி என்பது நம்மில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மம்முட்டி தற்போது “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் டீசர்கள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாவது டீசர் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில் மம்முட்டி மதுபானக் கடை பாரில் “கௌரவம்” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பேசிய வசனத்திற்கு பின்னணி கொடுத்துள்ளார். “கௌரவம்” திரைப்படத்தில் இரண்டு சிவாஜிக்கள் உண்டு. பாரிஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் சிவாஜி கலக்கி இருப்பார்.

இத்திரைப்படம் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் ஆனது. பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரம் ஆகும்.

இத்திரைப்படத்தில் இரண்டு சிவாஜிக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படும். அந்த வாக்கு வாத காட்சியை “நண்பகல் நேரத்து மயக்கம்” டீசரில் மம்முட்டி நடித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

                   

“நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி மலையாள சினிமா உலகில் ஒரு தனித்துவமான இயக்குனர். இவர் இயக்கிய “அங்கமாலி டைரீஸ்”, “ஜல்லிக்கட்டு”, “சுருளி” ஆகிய திரைப்படங்கள் மலையாள சினிமாவில் வித்தியாசமான முயற்சியாக அறியப்படுகிறது.

இவர் இயக்கி வரும் “நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top