CINEMA
தமிழ் இசையமைப்பாளர்களே வேண்டாம்; மலையாளத்துக்கு தாவிய கமல்..
கமலின் புதிய திரைப்படத்திற்கு இந்த இசையமைப்பாளர் தான் இசையமைக்கப் போகிறாராம்?
கமல் ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ராஜ் கமல் நிறுவனம் சார்பாக இரண்டு திரைப்படங்களை தயாரிக்க உள்ளார் கமல்.
அதன் படி சோனி பிக்சர்ஸூடன் இணைந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
மேலும் கமல் ஹாசன் “தேவர் மகன் 2” திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கிறார். இத்திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் “மாலிக்”, “டேக் ஆஃப்”, சி யூ சூன்” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் பல மலையாள திரைப்படங்களிலும் கமல் நடித்த “விஸ்வரூபம் 2” திரைப்படத்திலும் எடிட்டராக பணியாற்றியுள்ளார். சில மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாசனை வைத்து மகேஷ் நாராயணன் இயக்கும் திரைப்படத்திற்கு ஒரு புதிய இசையமைப்பாளர் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் சியாம் இத்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
சுஷின் சியாம் மலையாள திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர். இவர் “கும்பலாங்கி நைட்ஸ்”, “வைரஸ்”, “டிரான்ஸ்”, “கப்பேலா” என பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரை கேரளா அனிருத் என்றும் சிலர் கூறுவர்.
கமல் ஹாசன் “தேவர் மகன் 2” திரைப்படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
