CINEMA
மகேஷ் பாபு படத்தின் மாஸ் டிரைலர்.. சும்மா மசாலா தூள் பறக்குது..
மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் சர்காரு வாரிபட்டா திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் சக்கை போடு போடுகிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அறியப்படுபவர் மகேஷ் பாபு. அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். அவரது படங்கள் ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பரவலமாக ரசிக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் மகேஷ் பாபுவுக்கு மாஸ் ஆடியன்ஸ் உண்டு.
மகேஷ் பாபு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதே அவரது நடையும் வசனம் பேசுகிற ஸ்டைலும் பலரையும் கவர்ந்தது. அவரது படங்கள் தமிழில் பல டப் செய்திருந்தாலும் நேரடி தெலுங்கு படங்களையும் தமிழ் ரசிகர்கள் விடுவதில்லை.
எனினும் “ஸ்பைடர்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார். அதன் பின் “பரத் என்னே நானு” திரைப்படம் வெளியானது. அது தமிழில் “பரத் என்னும் நான்” என வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் பின் “மஹரிசி” திரைப்படம் வெளியானது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “சரிலேரு நீக்கெவரு” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. மேலும் அத்திரைப்படம் தமிழில் “இவனுக்கு சரியான ஆள் இல்லை” என்ற பெயருடன் வெளிவந்து தமிழிலும் ஹிட் ஆனது.
இதை தொடர்ந்து சர்காரு வாரிபட்டா திரைப்படம் உருவானது. சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் டீசர் ஒன்று வந்தது. அதன் பின் தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி உள்ளது. பக்கா கம்மெர்சியல் மெட்டீரியலாக இத்திரைப்படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி புதுமையான கதாப்பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். தமன் எஸ் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் என சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லை என தெரிகிறது. மே 12 –ல் இத்திரைப்படம் திரையரங்கிற்கு வருகிறது.
