Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உலகளவில் மகேஷ் பாபு செய்த சாதனை சாதனைய பாருங்க?

CINEMA

உலகளவில் மகேஷ் பாபு செய்த சாதனை சாதனைய பாருங்க?

மகேஷ் பாபுவின் திரைப்படம் உலகளவில் எவ்வளவு கலெக்சன் அள்ளிருக்கு என்று தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அறியப்படுபவர் மகேஷ் பாபு. அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். அவரது படங்கள் ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பரவலமாக ரசிக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் மகேஷ் பாபுவுக்கு மாஸ் ஆடியன்ஸ் உண்டு.

மகேஷ் பாபு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதே அவரது நடையும் வசனம் பேசுகிற ஸ்டைலும் பலரையும் கவர்ந்தது. அவரது படங்கள் தமிழில் பல டப் செய்திருந்தாலும் நேரடி தெலுங்கு படங்களையும் தமிழ் ரசிகர்கள் விடுவதில்லை.

எனினும் “ஸ்பைடர்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார். அதன் பின் “பரத் என்னே நானு” திரைப்படம் வெளியானது. அது தமிழில் “பரத் என்னும் நான்” என வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் பின் “மஹரிசி” திரைப்படம் வெளியானது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “சரிலேரு நீக்கெவரு” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. மேலும் அத்திரைப்படம் தமிழில் “இவனுக்கு சரியான ஆள் இல்லை” என்ற பெயருடன் வெளிவந்து தமிழிலும் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து சர்காரு வாரிபட்டா திரைப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு Mixed ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளது.

எனினும் இத்திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்கள் தான் ஆகிய நிலையில் உலகளவில் 103 கோடியையும் தாண்டி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. இதில் இருந்து மகேஷ் பாபுவுக்கு இந்தியா மட்டும் அன்றி வெளி நாடுகளிலும் மார்க்கெட் உள்ளது என நிரூபணம் ஆகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top