CINEMA
மாவீரன் படப்பிடிப்பு தொடங்கியது… சிவகார்த்திகேயனுடன் மிளிரும் அதிதி ஷங்கர்..
சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ..
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயிண்மென்ட் சார்பாக சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இதனை தொடர்ந்து அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தின் பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டார்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அப்புகைப்படங்கள் இதோ..
#Maaveeran / #Mahaveerudu shoot began yesterday. Thank you @shankarshanmugh for gracing us with your presence! 🙏🏼😇@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/6zCRzrOfDR
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 4, 2022
சிவகார்த்திகேயன் தற்போது பல திரைப்படங்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கிய “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது.
இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி ஜோடி சேர்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசனும் சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் தான் “மாவீரன்” திரைப்படமும் உருவாக உள்ளது.
“மாவீரன்” திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்குகிறார். விது அய்யன்னா இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பரத் ஷங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.
“மாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “மஹாவீருடு” என்ற பெயரில் வெளிவருகிறது.
