Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

குடும்பங்கள் கொண்டாடும் “மாமனிதன்”..  A Short review

REVIEW

குடும்பங்கள் கொண்டாடும் “மாமனிதன்”..  A Short review

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் “மாமனிதன்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்..

தேனிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விஜய் சேதுபதி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக வசித்து வருகிறார். ஆனால் தனது குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்.

அவ்வேளையில்  அந்த கிராமத்திற்கு ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் வருகிறார். அந்த புரோக்கரை பயன்படுத்தி விஜய் சேதுபதியும் ஒரு புரோக்கர் ஆகிறார். இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளை தான் நினைத்தது போல் படிக்க வைத்தாரா இல்லையா? ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆன விஜய் சேதுபதி மாமனிதர் ஆனாரா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.

விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி நாம் சொல்லத்தேவை இல்லை. தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் காயத்ரி ஒரு குடும்பத் தலைவியாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் கே பி ஏ சி லலிதா, கஞ்சா கருப்பு, குரு சோமசுந்தரம் ஆகியோர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

திரைக்கதை முதல் பாதி ஓரளவு திணறினாலும் இரண்டாம் பாதியில் கண்ணீரை வர வைத்து விடுகிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கிராமத்தின் அழகினையும் அதன் மனிதர்களின் வாழ்வியலையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஸ்ரீதரின் படத்தொகுப்பு திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப இயல்பாக இருக்கிறது.

“மாமனிதன்” திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். திரையில் மிளிறும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் இயல்பிற்கேற்பவும் காட்சியின் நகர்வுக்கு ஏற்றார் போலவும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற மையக்கதையை கொண்டு குடும்பங்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top