CINEMA
Lucky Fan boy லோகேஷ்… காரை பரிசாக பெற்று குஜால்!!
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜிற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் திரைப்பட வரலாற்றிலேயே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களாகவே கமல் ஹாசன் குஷியாக இருக்கிறார்.
“விக்ரம்” வெற்றியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு தன் கைப்பட நெகிழ்ச்சி பொங்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார் கமல். அக்கடிதத்தை லோகேஷ் கனகராஜ் லைஃப் டைம் செட்டில்மண்ட் ஆக எண்ணி அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்திருக்கிறார். அதாவது லெக்சஸ் தயாரிப்பின் சொகுசு மாடல் கார் ஒன்றை கமல் ஹாசன் பரிசளித்துள்ளார். இதனை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் லோகேஷ் கனகராஜ் “மிகவும் நன்றி ஆண்டவரே” என மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை “விக்ரம்” திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.
அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 170 கோடிகளுக்கும் மேல் அசூரத்தனமாக வசூல் செய்துள்ளது. பல காலம் கழித்து கமல் ஹாசனுக்கு மாஸ் ஹிட் ஆக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
