Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ரெண்டு காலையும் மடித்து தலை வரை தூக்கி யோகா பண்ண லாஸ்லியா.. அடேங்கப்பா!!

CINEMA

ரெண்டு காலையும் மடித்து தலை வரை தூக்கி யோகா பண்ண லாஸ்லியா.. அடேங்கப்பா!!

இரண்டு கால்களையும் மடித்து தலை வரை தூக்கி யோகா செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

சிங்களத்து சின்ன குயிலான லாஸ்லியா மரியநேசன் தொடக்கத்தில் இலங்கையில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சக கன்டெஸ்டென்ட்டான கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின்-லாஸ்லியா இருவரும் ஜோடியாக பார்க்கும்போது ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். ஆனால் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்து அவரை கண்டித்துவிட்டு போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த லாஸ்லியா, அதன் பின் “ஃப்ரெண்ட்ஷிப்”, “கூகுள் குட்டப்பா” போன்ற திரைப்படங்களில் நடித்தார். லாஸ்லியா ஒரு கிளாமர் குயீனாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் திரிந்தார். இவரின் பேரழகில் வாயடைத்துப்போய் நின்றனர் ரசிகர்கள்.

திரைப்படங்களில் அவ்வளவாக கிளாமரில் தென்படாத லாஸ்லியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படு கிளாமராக கண்களை சொக்க வைக்கும் அளவுக்கு நடமாடி வருகிறார். எனினும் லாஸ்லியா உடற்பயிற்சியில் தீவிர வெறி உடையவர்.

இந்த நிலையில் தற்போது லாஸ்லியா தான் யோகா செய்யும் ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு கால்களையும் மடித்து தலை வரை கொண்டு வருகிறார். இதனை பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது. கமெண்ட் பகுதியில் பலரும் “வேற லெவல்” “வாவ்” என கம்மென்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top