Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

லோகேஷ் கனகராஜ்- விஜய் இணையும் படத்திற்கு இவர் தான் ஹீரோயின்..

CINEMA

லோகேஷ் கனகராஜ்- விஜய் இணையும் படத்திற்கு இவர் தான் ஹீரோயின்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார்? என்பது குறித்த அப்டேட் ஒன்று வந்துள்ளது.

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது.

“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் தெரிய வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் லோகேஷ் விஜய்யை வைத்து இயக்க உள்ள திரைப்படம் LCU-க்குள் வருமா? எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top