CINEMA
பாலிவுட்டிற்கு போகிறார் லோகேஷ் கனகராஜ்.. இந்தியாவின் டாப் நடிகர் தான் ஹீரோ தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டிற்கு செல்லவுள்ளதாகவும் இந்தியாவின் அந்த டாப் நடிகர் தான் ஹீரோ எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“விக்ரம்” திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் “தளபதி 67” திரைப்படத்திற்கான Pre Production பணிகளில் இருக்கிறார். விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகி உள்ளதால் ரசிகர்கள் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” திரைப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் “தளபதி 67” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் இயக்கப் போகிறாராம்.
அந்த திரைப்படத்தில் யார் ஹீரோ தெரியுமா? அந்த திரைப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் மைத்ரி புரொடக்சன்ஸ் நிறுவனத்தார் சல்மான் கானையும் லோகேஷ் கனகராஜ்ஜையும் அழைத்து பேசியுள்ளனராம்.
“தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோர் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் முன்னமே வெளிவந்தது. இதனை அமீர் கான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் சல்மானை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
