Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மார்வெல் திரைப்படங்களை வம்புக்கு இழுக்கும் லோகேஷ் கனகராஜ்.. இனி அவர் ரேஞ்சே வேற

CINEMA

மார்வெல் திரைப்படங்களை வம்புக்கு இழுக்கும் லோகேஷ் கனகராஜ்.. இனி அவர் ரேஞ்சே வேற

மார்வெல் திரைப்படங்களை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு செயலை செய்ய இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட் ஆன நிலையில் கமல் ஹாசன் படு குஷியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.

“விக்ரம்” திரைப்படத்தில் “கைதி” திரைப்படத்தின் “தில்லி” கதாப்பாத்திரத்தை பயன்படுத்தி சில காட்சிகளை இணைத்திருப்பார் இயக்குனர் லோகேஷ். மேலும் “விக்ரம்” திரைப்படத்தின் இறுதியில் “கைதி” திரைப்படத்தையும் கனெக்ட் செய்து “கைதி” இரண்டாம் பாகத்திற்கான Lead-ஐ தந்திருப்பார்.

இதனை கொண்டு ரசிகர்கள் பலர் இது மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) போல் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என அழைக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இனி அவர் திரைப்படங்களில் “கைதி”, “விக்ரம்” திரைப்பட தொடர்ச்சியாகவோ அல்லது அத்திரைப்படங்களின் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாகவோ இருக்குமேயானால் அத்திரைப்படத்தை LCU என குறிப்பிடுவதாக கூறி இருக்கிறார். அதாவது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என குறிப்பிடுவதாக கூறியுள்ளார்.

மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்கா, தோர், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பிளாக் விடோவ், வாண்டா, விஷன், ஹல்க் போன்ற பல சூப்பர் ஹீரோக்களை ஒன்றாக இணைத்து Marvel Cinematic Universe என்ற வரிசையின் கீழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருந்தன. அதே போல் லோகேஷ் கனகராஜ்ஜும் களத்தில் இறங்கியுள்ளார் என தெரிய வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top