CINEMA
லிங்குசாமி is back! வெளியானது “தி வாரியர்” டீசர்
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் லிங்குசாமி “ஆனந்தம்”, “ரன்”, “சண்டக்கோழி”, “ஜீ”, “பீமா”, “பையா”, “வேட்டை” ஆகிய பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். இவர் கை வைத்தால் அப்படம் ஹிட்டு தான் என கோலிவுட்டில் ஒரு பிரபல Talk உண்டு.
ஆனால் அவர் இயக்கிய அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய திரைப்படங்கள் சரியாக எடுபடவில்லை. “லிங்குசாமி அவ்வளவு தான்” போன்ற பேச்சுக்கள் ஆங்காங்கே வலம் வந்தன.
இந்நிலையில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் “தி வாரியர்” என்ற திரைப்படத்தை லிங்குசாமி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
அதன் பின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் “தி வாரியர்” திரைப்படத்தின் “புல்லட்” பாடல் வெளிவந்தது. இப்பாடல் டிரெண்டிங் பாடலாக அமைந்தது. பலரும் இப்பாடலை ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக இத்திரைப்படத்தின் ஹீரோ ராம் பொத்தினேனியும் கதாநாயகி கிரீத்தி ஷெட்டியும் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களையும் குத்தாட்டம் போட வைத்தது.
இத்திரைப்படத்தின் கதாநாயகியான கிரீத்தி ஷெட்டி ஹிந்தியில் “சூப்பர் 30” திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமாகியது என்னவோ தெலுங்கில் வெளிவந்த “உப்பண்ணா”வில் தான். “உப்பண்ணா” திரைப்படத்திலேயே தனது பார்வையால் கொக்கி போட்டு ரசிகர்களை தூக்கி தொங்கவிட்டு விட்டார்.
அதன் பிறகு கிரீத்தி ஷெட்டிக்கு ஏறுமுகம் தான். நாக சைதன்யாவுடன் “பங்காருராஜு”, நானியுடன் “ஷ்யாம் சிங்கா ராய்” என டாப் ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் கிரீத்தி ஷெட்டி நடித்து லிங்குசாமி இயக்கிய “தி வாரியர்” திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. லிங்குசாமியின் கமெர்சியல் ஆக்சன் பேக்கேஜாக இப்படம் அமையவுள்ளது என டிரைலரை பார்க்கும் போது வியூகிக்க முடிகிறது. இணையவாசிகள் “லிங்குசாமி is back” என புகழ்ந்து இத்திரைப்படத்தின் டிரைலரை வைரலாக்கி வருகின்றனர்.