Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்தவன் சார் என் பையன்…” வெளியானது “லைகர்” டிரைலர்

CINEMA

“சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்தவன் சார் என் பையன்…” வெளியானது “லைகர்” டிரைலர்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் “லைகர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் “பெல்லி சொப்புலு” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும் “அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பரவலாக அறியப்பட்டார்.

அதன் பின் தமிழில் நேரடியாக “நோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர். இன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்பவர்.

சமீபத்தில் மைக் டைசனும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து “லைகர்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தனர். இதில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் “லைகர்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. “சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்தவன் சார் என் பையன்” என ரம்யா கிருஷ்ணன் கூறும் டெரிஃபிக் வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது. இதில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக வருகிறார். அவருக்கு திக்கு வாய் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அனன்யா பாண்டே மிகவும் கிளாமராக தென்படுகிறார்.

மைக் டைசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அட்டகாசமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

“லைகர்” திரைப்படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்னாத், அபூர்வா மேத்தா, ஹிரு யாஷ் ஜோகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

“லைகர்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 25 ஆம் தேதி வெளிவருகிறது.

                 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top