CINEMA
“லெஜண்ட்” சரவணனுக்கு இத்தனை ரசிகர் மன்றங்களா? வைரல் போஸ்டர்கள்
“லெஜண்ட்” சரவணனுக்கு அவரது ரசிகர் மன்றங்கள் வெளியிட்ட போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
“லெஜண்ட்” சரவணன் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.
“தி லெஜண்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக “மொசலோ மொசலோ” பாடல் அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதில் “லெஜண்ட்” சரவணன் ஸ்டைலாகவும் மாஸாகவும் திகழ்ந்தார். சிறப்பாக நடனமும் ஆடினார். இப்பாடல் யூட்யூப்பில் 13 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து கிராமத்து ஸ்டைலில் “வாடி வாசல்” பாடல் வெளியானது. இதில் லட்சுமி ராய்யுடன் “லெஜண்ட்” சரவணன் குத்தாட்டம் போட்டிருப்பார். இப்பாடல் யூட்யூப்பில் 17 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.
அதன் பின் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்தது. டிரைலரை பார்க்கும் போது ஒரு நல்ல ஆக்சன் பிளாக் திரைப்படமாக “தி லெஜண்ட்” திரைப்படம் வெளிவர இருப்பாதாக தெரிய வந்தது. இதில் “லெஜண்ட்” சரவணன் சயிண்டிஸ்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலர் யூட்யூப்பில் 28 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் “லெஜண்ட்” சரவணனுடைய ரசிகர் மன்றங்கள் “தி லெஜண்ட்” திரைப்படம் வெற்றி பெற வேண்டி பல போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
“நெட்டிசன்கள் ‘லெஜண்ட்’ சரவணனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன?” என்று வியப்போடு பார்த்து வருகின்றனர்.
