CINEMA
“அம்மா ன்னா சும்மா இல்ல”….மனம் நெகிழ்ந்த குஷ்பு..
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய அம்மாவுடன் பிறந்த நாள் வாழ்த்துகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகையான குஷ்பு பல இந்திய திரைப்படங்களில் குழந்த நட்சத்திரமாக ஜொலித்திருந்தாலும் “தர்மத்தின் தலைவன்” என்ற திரைப்படம் மூலம் தமிழுகக்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு “வருஷம் 16”, “வெற்றி விழா” என பல திரைப்படங்களில் இளமை துள்ளலோடு நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
குஷ்பு என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது குஷ்பு இட்லி தான். அந்தளவுக்கு குஷ்புவின் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது குஷ்பு சேலை, குஷ்பு ஜிமிக்கு , குஷ்பு காஃபி என இப்பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் அவர்.
குஷ்பு 2000 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். பின்பு “அவ்னி சினிமாஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார்.
குஷ்பு 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்பு 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியே வந்து காங்கிரஸில் இணைந்தார். அதன் பின் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். கடந்த 2021-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம்விளக்கு பகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சினிமா, அரசியல் என பல பரிமாணங்களில் களமாடும் குஷ்புவின் தாயாருக்கு இன்று பிறந்த நாள். இதுவரை குஷ்புவின் அம்மாவை பெரும்பாலும் பொது வெளியில் நாம் கண்டிருக்கமாட்டோம். இந்நிலையில் இன்று குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவை அணைத்தவாறு ஒரு செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் அவர் மேலும்;
“அம்மா!! கடவுளால் அனுப்பி வைத்தவர் இவர். அம்மாவுக்கு நிகர் இங்கு எவரும் இல்லை. எனது அம்மா தான் நான் கண்டதிலேயே மிகவும் அழகான பெண்மணி. இன்று அவரது 78 ஆவது பிறந்தநாளில் அம்மா என்னும் அன்பை, இரக்கத்தை, மனிதத்தை எனக்கு தந்ததற்காக அல்லாவை நான் வணங்கிகொள்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.” என குறிப்பிட்டுள்ளார்.