GALLERY
நோக்கு வர்மத்தால் வசியம் வைக்கும் கிரீத்தி ஷெட்டி…
நடிகை கிரீத்தி ஷெட்டி தனது நோக்கு வர்மத்தால் வசியம் வைக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கிரீத்தி ஷெட்டி ஹிந்தியில் “சூப்பர் 30” திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமாகியது என்னவோ தெலுங்கில் வெளிவந்த “உப்பண்ணா”வில் தான். “உப்பண்ணா” திரைப்படத்திலேயே தனது பார்வையால் கொக்கி போட்டு ரசிகர்களை தூக்கி தொங்கவிட்டு விட்டார்.
அதன் பிறகு கிரீத்தி ஷெட்டிக்கு ஏறுமுகம் தான். நாக சைதன்யாவுடன் “பங்காருராஜு”, நானியுடன் “ஷ்யாம் சிங்கா ராய்” என டாப் ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேரடி தமிழ் திரைப்படம் ஒன்றிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, என பிசியாக வலம் வரும் கிரீத்தி ஷெட்டி, தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை இறக்கி வருகிறார். அவரின் கண் பார்வைக்கே இளைஞர்களின் நெஞ்சில் மின்னல் வெட்டும்,.
காற்றில் அலையாடும் அவரின் கூந்தல் ஆளை சொக்கவைக்கும். அவரின் சிரிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. டோட்டல் பாடி குளோஸ். இவ்வாறு அழகு பதுமையான கிரீத்தி ஷெட்டியின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படங்களில் மட்டுமல்லாது இன்ஸ்டாவிலும் பிசியாக வலம் வருவதால் கிரீத்தி ஷெட்டியின் ரசிகர்கள் பெரும் குஷியில் இருக்கிறார்கள்.