GALLERY
சேலையில சும்மா கலக்கலா இருக்காங்களே.. கிரீத்தி ஷெட்டியின் கிளாமர் புகைப்படங்கள்
கிரீத்தி ஷெட்டி சேலையில் சும்மா கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென் இந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் கிரீத்தி ஷெட்டி. இவர் ஹிந்தியில் “சூப்பர் 30” திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமாகியது என்னவோ தெலுங்கில் வெளிவந்த “உப்பண்ணா”வில் தான். தனது முதல் திரைப்படத்திலேயே தனது பார்வையால் கொக்கி போட்டு ரசிகர்களை தூக்கி தொங்கவிட்டு விட்டார்.
அதன் பிறகு கிரீத்தி ஷெட்டிக்கு ஏறுமுகம் தான். நாக சைதன்யாவுடன் “பங்காருராஜு”, நானியுடன் “ஷ்யாம் சிங்கா ராய்” என டாப் ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்திருக்கும் “தி வாரியர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. அதில் கிரீத்தி அணிந்திருக்கும் சிக்கென்ற உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனம் பார்வையாளர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் “வணங்கான்” திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி தமிழுக்கு என்ட்ரி கொடுப்பதால் தமிழ் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே கிரீத்தி ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் மோகப் பார்வையுடன் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் வேற லெவல் ஹாட் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.