TELEVISION
பக்கத்திலே நிக்காதீங்க Kiss அடிச்சிடுவேன்.. வித்யூலேகா கணவரை பாடாய் படுத்திய பாலா
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபேமிலி மற்றும் ஃப்ரெண்ட்ஸ் வீக் என்பதால் வித்யூலேகா அவரது கணவரை அழைத்து வந்திருந்தார். பாலா அவரை பாடாய் படுத்தி விட்டார்.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் ஃபேமிலி வீக் என்பதால் குக்குகள் அவரவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வித்யூலேகா தனது கணவர் சஞ்சய்யை அழைத்து வந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்தவுடன் பாலா ஓடிச்சென்று வித்யூலேகாவின் கணவருக்கு சூடம் ஏத்தி பொன்னாடை போர்த்தினார். வித்யூலேகாவை குறிப்பிட்டு “எப்படி இதெல்லாம் சமாளிக்கிற?” என கேட்டு வித்யூலேகாவை பங்கமாய் கலாய்த்தார்.
அதன் பின் கோமாளியை தேர்வு செய்த போது சஞ்சய்-வித்யூலேகா தம்பதியினருக்கு பாலாவே கோமாளியாகவும் வந்தது வேற லெவல் சர்ப்ரைஸாக இருந்தது. முதல் ரவுண்டில் மாவு ஆட்டும் டாஸ்க்.
சஞ்சய் நன்றாக வெண்ணெய் நிறத்தில் இருந்ததால் பாலா அடிக்கடி செல்லம், புஜ்ஜி என கொஞ்சிக்கொண்டே இருந்தார். சஞ்சய் மாவு ஆட்டிக்கொண்டிருந்த போது “ஆளு சும்மா பட்டர் மேல் போட்ட பெப்பர் மாதிரி இருக்காரு” என கொஞ்சிக் கொண்டே வந்தார். அதன் பின் “இது போன்ற கணவர் கிடைப்பதற்கு கச்சத்தீவில் தவம் இருக்கலாம்” என ரைமிங்காக கூறியது வித்யூலேகாவை சிரிப்பில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து “பக்கத்திலே நிக்காத பத்து கிஸ் அடிச்சிடுவேன்” என பாலா கூறியபோது வேற லெவல் Fun ஆக இருந்தது. இந்த வாரம் இம்யூனிட்டி வாரமும் என்பதால் யார் இம்யூனிட்டி வெல்லப் போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
