CINEMA
“கே. ஜி. எஃப். செட்டே பயங்கரமாக இருக்கே”.. அதிரி புதிரியான மேக்கிங் வீடியோ
“கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
“கே. ஜி. எஃப்2 ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச்செய்யவும் தவறவில்லை.
கடந்த அன்னையர் தினம் அன்று “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தின் “அகிலம் நீ” என்ற பாடல் வெளிவந்தது. அதன் தொடர்சியாக இன்று காலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடலான “மெஹபூபா” பாடல் வெளிவந்தது.
திரைப்படத்தின் கதாநாயகி ராக்கியின் மேல் அன்பு வராத நிலையில் ஒரு தருணத்தில் காதல் மலர்கிறது. அப்போது இடம்பெறும் பாடலே “மெஹபூபா” பாடல். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே காதல் பாடல் இது தான். ஸ்ரீநிதி ஷெட்டி இளமை ததும்ப கண்களில் காதல் ரசத்துடன் ஹீரோவை அணுகி பாடுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்பாடல் இன்று காலை இணையத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது. கே. ஜி. எஃப். திரைப்படம் மட்டுமல்லாது படப்பிடிப்பு செட்டே பயங்கரமாக உள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தங்களது நினைவுகளையும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் மேக்கிங் வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இயக்குனர் பிரசாந்த் நீல் மிகவும் பரபரப்பாகவும் நேர்த்தியாகவும் வேலை செய்கிறார். மூன்றாயிரத்திற்கும் மேலான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை எப்படி சமாளித்தார்கள் என்று படக்குழுவினர் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.