Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஐயோ இப்படி பாக்காதீங்க கீர்த்தி சுரேஷ்”… சொக்கி பார்த்து கொக்கி போட்டு இழுக்கும் வைரல் புகைப்படங்கள்..

GALLERY

“ஐயோ இப்படி பாக்காதீங்க கீர்த்தி சுரேஷ்”… சொக்கி பார்த்து கொக்கி போட்டு இழுக்கும் வைரல் புகைப்படங்கள்..

நடிகர் கீர்த்தி சுரேஷ் மயக்கும் விழிகளில் கொக்கி போட்டு இழுக்கும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் “இது என்ன மாயம்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த “அண்ணாத்த” திரைப்படத்தில் கூட தங்கை கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

அவரது சிரிப்பே நம் மனதை தாளம் போட வைக்கும். திரைத்துறையில் கதாநாயகியாக நடிக்க வந்த தொடக்கத்தில் Chubby-யாகவும் க்யூட்டாகவும் இருந்த கீர்த்தி சுரேஷ் காலப்போக்கில் சிக்கென்று ஹாட் பறவையாக சுற்றிக் கொண்டு வருகிறார்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மகாநடி”. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியானது. நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மகாநடி”-ல் சாவித்ரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமா உலகமே “ஆ” வென பார்த்தது. “கீர்த்தியா இப்படி வெளுத்து வாங்குவது” என பலரும் பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.

அதே போல் சமீபத்தில் வெளியான “சாணி காயிதம்” திரைப்படம் அவர் நடிப்பின் மற்றொரு ரூபத்தை காட்டியது. வன்முறை காட்சிகளில் கண்களில் காளியே தாண்டவம் ஆடுவது போல் நடித்து “ஓ” போட வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் நேற்று வெளிவந்த “சர்காரு வார்ப்பட்டா” என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு, தமிழ் என படு பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கண்களால் கொக்கி போட்டு இழுக்கும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top