GALLERY
போகிற போக்கில் கவர்ச்சியை அள்ளித் தெளித்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் ஹாட் புகைப்படங்கள்..
போகிற போக்கில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இளைஞர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் “இது என்ன மாயம்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “அண்ணாத்த” திரைப்படத்தில் கூட தங்கை கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
அவரது சிரிப்பே நம் மனதை தாளம் போட வைக்கும். திரைத்துறையில் கதாநாயகியாக நடிக்க வந்த தொடக்கத்தில் Chubby-யாகவும் க்யூட்டாகவும் இருந்த கீர்த்தி சுரேஷ் காலப்போக்கில் சிக்கென்று ஹாட் பறவையாக சுற்றிக் கொண்டு வருகிறார்.
இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மகாநடி”. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியானது. நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மகாநடி”-ல் சாவித்ரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய சினிமா உலகமே “ஆ” வென பார்த்தது. “கீர்த்தியா இப்படி வெளுத்து வாங்குவது” என பலரும் பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பின் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சாணி காயிதம்” திரைப்படம் அவர் நடிப்பின் மற்றொரு ரூபத்தை காட்டியது. வன்முறை காட்சிகளில் கண்களில் காளியே தாண்டவம் ஆடுவது போல் நடித்து “ஓ” போட வைத்தார்.
மேலும் சமீபத்தில் வெளியான “சர்க்காரு வாரி பட்டா” திரைப்படத்தில் கவர்ச்சியாக வலம் வந்து உள்ளங்களை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் போகிற போக்கில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.