CINEMA
தனது நாயுடன் ஸ்டைலா கெத்தா ஒரு போஸ்… கீர்த்தி சுரேஷின் Stunning புகைப்படங்கள்..
கீர்த்தி சுரேஷ் ஸ்டைலாக தனது காரில் சாய்ந்தபடி செல்ல நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்துள்ளார். அனுதினமும் தனது சொக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடிப்பதே கீர்த்தி சுரேஷின் வேலையாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த புதிதில் மிகவும் Chubby மற்றும் கியூட் கேர்ளாக இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டு போனார். அதன் பின் தனது உடலை மெருகேற்றி மாடல் அழகியாக தற்போது உருமாறி உள்ளார்.
தொடக்கத்தில் ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் கதாநாயகியாக திரிகிறார். இவரா இப்படி? என பலரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடித்த பல திரைப்படங்களில் அனலைக் கிளப்பும் ஆடைகளுடன் பலரையும் கவ்விக் கொண்டு கடத்தி சென்று வருகிறார். மேலும் கியூட்டாக பல ரியாக்சன்களை தந்து மனதை கொக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போகிறார்.
சமீபத்தில் வெளிவந்த “வாசி”, “சர்க்காரு வாரி பட்டா” போன்ற திரைப்படங்களில் கியூட்டாக வலம் வந்து உள்ளங்களை கொள்ளைகொண்டார்.
கீர்த்தி சுரேஷ் எப்போதும் ஓய்வு நேரத்தை தனது செல்ல நாயுடன் தான் கழிப்பார். தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் செல்ல நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது தனது காரில் சாய்ந்துகொண்டு செல்ல நாயுடன் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
View this post on Instagram
