Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கம்முனு இரு….” ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கீர்த்தி சுரேஷ்… என்னவா இருக்கும்?

CINEMA

“கம்முனு இரு….” ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கீர்த்தி சுரேஷ்… என்னவா இருக்கும்?

கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார். ஏன் தெரியுமா?

திரைத்துறையில் கதாநாயகியாக நடிக்க வந்த தொடக்கத்தில் Chubby-யாகவும் க்யூட்டாகவும் இருந்த கீர்த்தி சுரேஷ் காலப்போக்கில் சிக்கென்று ஹாட் பறவையாக சுற்றிக் கொண்டு வருகிறார்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மகாநடி”. இத்திரைப்படம். நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மகாநடி”-ல் சாவித்ரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பின் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சாணி காயிதம்” திரைப்படம் அவர் நடிப்பின் மற்றொரு ரூபத்தை காட்டியது. வன்முறை காட்சிகளில் கண்களில் காளியே தாண்டவம் ஆடுவது போல் நடித்து “ஓ” போட வைத்தார். மேலும் சமீபத்தில் வெளியான “சர்க்காரு வாரி பட்டா” திரைப்படத்தில் கவர்ச்சியாக வலம் வந்து உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

சமீபத்தில் கூட மேக்கப் எதுவும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் க்யூட்டாக இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் தனது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கீர்த்தி சுரேஷ் கட்டளையிட்டுள்ளார். அதாவது தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது அப்பார்ட்மென்ட் மொட்டை மாடியில் நின்று மழை பெய்வதை ஒரு குடை பிடித்தவாறு ரசித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு மழையை குடை பிடித்து ரசித்தவாறு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் “Keep calm and enjoy the rain” என கூறியுள்ளார். அதாவது அமைதியாக இருந்து மழையை கொண்டாடுங்கள் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top